பிரதமர் மோடிக்காக 14 வருடங்கள் செருப்பே அணியாமல் இருந்து வந்த இளைஞர்... நேரில் சந்தித்த மோடி!

இந்தியாவின் பிரதமர் மோடி ஹரியானாவின் யமுனாநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஒரு முக்கியமான மனிதனை சந்தித்தார். அவரது சந்திப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கைத்தல் மாவட்டத்தைச் சேர்ந்த ராம்பால் காஷ்யப் என்ற நபர், மோடி பிரதமராகவதையும் அவரை நேரில் சந்திக்கும் வரையிலும் காலணிகளை அணிய மாட்டேன் என 14 ஆண்டுகளுக்கு முன்பு சபதம் செய்திருந்தார். இந்த உறுதியைப் பின்பற்றி கடந்த 14 ஆண்டுகளாக இவர் எந்த சூழ்நிலைலும் காலில் செருப்பு இல்லாமல் இருந்துள்ளார்.
இந்த நெஞ்சை உருக்கும் தருணத்தில், மோடி அவருக்கு நேரில் செருப்பு அணியச் செய்து அவரது நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றினார். இந்த நெகிழ்ச்சியான தருணம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இது குறித்த வீடியோவை பிரதமர் மோடி சமூக வலை தளங்களில் பதிவிட்டு “இன்று யமுனா நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கைத்தலிலிருந்து வந்த ராம்பால் காஷ்யப்பை சந்தித்தேன். அவர் 14 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு உறுதி எடுத்தார் – நான் பிரதமராகினால் மற்றும் அவரை நேரில் சந்தித்த பிறகே செருப்பு அணிவேன் என சபதம் எடுத்திருந்தார். இவரைப் போல மக்களை சந்திக்கும்போது நான் மிக நெகிழ்கிறேன்,” என பதிவிட்டுள்ளார். அதன் பிறகு இது போன்ற முடிவுகளால் உங்களுடைய உடலை நீங்கள் வருத்திக்க வேண்டாம் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!