துக்க வீட்டுக்கு சென்ற போது சோகம்... ரயிலில் தவறி விழுந்து தாயின் கண்முன்னே மகன் உடல் நசுங்கி பலி!

 
 துக்க வீட்டுக்கு சென்ற போது சோகம்... ரயிலில் தவறி விழுந்து தாயின் கண்முன்னே மகன் உடல் நசுங்கி பலி!  

தமிழகத்தில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில்  வசித்து வருபவர் பிரதீப். இவர்  தாய் மற்றும் அத்தைகளுடன் திருவள்ளூர் மாவட்டம் திருவல்லங்காடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோயம்புத்தூரில் இருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி விரைவு விரைவில் பயணம் செய்தார். இவர்கள்  அரக்கோணம் ரயில் நிலையத்தை வந்து அடைந்தனர். 

 துக்க வீட்டுக்கு சென்ற போது சோகம்... ரயிலில் தவறி விழுந்து தாயின் கண்முன்னே மகன் உடல் நசுங்கி பலி!  

இதில் இவர்கள் கொண்டு வந்த பை ஒன்று காணாமல் போய்விட்டதாக தெரிகிறது. பிரதீப்  ரயில் புறப்படும் முன்பு முன்பதிவு இல்லா பட்டியில் சென்று தனது பை இருக்கிறதா என பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்பொழுது ரயில் எடுப்பதற்கான ஒலி எழுப்பப்பட்டது. 

குழந்தை  பலி
இதனை தொடர்ந்து பிரதீப் ஓடிச் சென்று ரயில் உள்ளே ஏற முயன்ற போது தவறி நடைமேடை மற்றும் ரயிலுக்கு இடையே சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். மேலும் தாய் மற்றும் அத்தை என அனைத்து உறவினர்கள் கண்முன்னே மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இன்டர்சிட்டி விரைவு ரயில்  அரை மணி நேரம் காலதாமலமாக புறப்பட்டு சென்றது. மேலும் பிரதீப்புக்கு திருமணமாகி 4  ஆணடுகள் ஆகும் நிலையில்  இவருக்கு குழந்தைகள் யாரும் இல்லை பெற்ற தாய் கண் முன்னே மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?