மனைவி கடைசி ஆசையை நிறைவேற்ற இந்தியா வந்தவர் விமான விபத்தில் பலி... தந்தை வருவார் என லண்டனில் காத்திருக்கும் மகள்கள்?

மனைவி கடைசி ஆசையை நிறைவேற்ற இந்தியா வந்தவர் விமான விபத்தில் பலி...  தந்தை வருவார் என லண்டனில் காத்திருக்கும் மகள்கள்?

அர்ஜூன் தனது மனைவி பாரதிபென் மற்றும் 2  மகள்களுடன் லண்டனில் வசித்து  வந்தார். கடந்த 7 நாட்களுக்கு முன்பு  பாரதி பென் உயிரிழந்தார்.

நீண்ட நாட்களாக சிகிச்சையில் இருந்து வந்த பாரதி பென், தான் உயிரிழந்துவிட்டால், எனது அஸ்தியை இந்தியாவில் உள்ள சொந்த ஊரில் நர்மதை ஆற்றில் கரைக்க வேண்டும் என கடைசி ஆசையை கூறிவிட்டு உயிரிழந்தார்.  

மனைவி கடைசி ஆசையை நிறைவேற்ற இந்தியா வந்தவர் விமான விபத்தில் பலி...  தந்தை வருவார் என லண்டனில் காத்திருக்கும் மகள்கள்?
அவரது கடைசி ஆசையை நிறைவேற்ற பாரதி பென் அஸ்தியுடன் இந்தியா வந்து, உள்ளூர் ஆற்றில் கரைத்துவிட்டு, இந்தியாவிலிருந்து லண்டன் திரும்ப ஏர் இந்தியா விமானத்தில் ஏறிய அர்ஜூன், அகமதாபாத் விமான விபத்தில் பலியான 241 பயணிகளில் ஒருவர் என அறியப்படுகிறது. 
அர்ஜூனுக்கு 8 மற்றும் 4 வயதில் இரண்டு மகள்கள்.  தாயின் அஸ்தியைக் கொண்டு சென்ற தந்தையும் விமான விபத்தில் பலியாக, பெற்றோரை இழந்து லண்டனில் தவிக்கும் மகள்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.  அவரது இரண்டு மகள்களும் தந்தை வருவார் என லண்டனில் காத்திருக்கிறார்கள். தாயை ஒரு வாரத்துக்கு முன்பு இழந்து, தந்தையையும் நேற்று இழந்த நிலையில், யார் அவர்களுக்கு ஆறுதல் சொல்வார்கள்?

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது