மனைவியின் நிச்சயதார்த்த புடவையை காதலிக்கு பரிசளித்த கணவன்... ஆத்திரத்தில் அடித்து காலை உடைத்த உறவினர்கள்!

 
மனைவி தம்பதி காதலர்கள் புடவை சேலை காதலி

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் ஆனேக்கல் பகுதியில், ஒரு பட்டுச் சேலை விவகாரம் திருமண வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

ஆனேக்கல் தாலுகா பனஹள்ளியைச் சேர்ந்த நந்தினி (25) என்பவருக்கும், கலபுரகி மாவட்டத்தைச் சேர்ந்த அம்பரீஷ் என்பவருக்கும் கடந்த வாரம் விமரிசையாகத் திருமணம் நடைபெற்றது. அம்பரீஷுக்கு திருமணத்திற்கு முன்பே ஒரு பெண்ணுடன் காதல் இருந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகும் அவர் அந்தக் காதலியுடனான தொடர்பைக் கைவிடவில்லை எனக் கூறப்படுகிறது. தனது மனைவியின் விலை உயர்ந்த நிச்சயதார்த்த பட்டுச் சேலையை, அம்பரீஷ் ரகசியமாக எடுத்துச் சென்று தனது காதலிக்குப் பரிசாக வழங்கியுள்ளார்.

காதல்… கல்யாணம்… தனிக்குடித்தனம்!! இளம்பெண்ணை ஏமாற்ற முயன்ற VAO!! தர்ணாவில் இறங்கிய காதலி!!

தனது நிச்சயதார்த்த சேலை காணாமல் போனது குறித்து விசாரித்த நந்தினிக்கு, உண்மை தெரிந்ததும் அதிர்ச்சியில் உறைந்து போனார். இது குறித்து அவர் தனது பெற்றோரிடம் முறையிட்டார். இதில் ஆத்திரமடைந்த நந்தினியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அம்பரீஷின் வீட்டிற்குச் சென்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், அம்பரீஷை அவர்கள் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் அம்பரீஷின் கால் முறிந்தது.

படுகாயமடைந்த அம்பரீஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது தாய் அளித்த புகாரின் பேரில், சூர்யா நகர் போலீசார் நந்தினியின் உறவினர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

காதல் காதலி

இந்தியாவில் திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் தற்போது தண்டனைக்குரிய குற்றமல்ல என்றாலும், அது விவாகரத்து பெறுவதற்கான முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. அதே சமயம் ஒருவரைத் தாக்கி எலும்பு முறிவு ஏற்படுத்துவது  கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும். நந்தினி தரப்பிலும் அம்பரீஷ் மீது நம்பிக்கை மோசடி மற்றும் வரதட்சணை கொடுமை போன்ற புகார்கள் அளிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!