வாகனங்கள் மோதி வாலிபர் மரணம்... உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

 
ஸ்கூட்டர் மீது வாகனம் மோதி விபத்து
தூத்துக்குடி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகில் அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்..

தூத்துக்குடி மாவட்டம் தாதன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சாம் டேனியல் (26). இவர் வி.எம். சத்திரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் சேல்ஸ் மேனாக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு திருணம் ஆகவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வேலைக்கு சென்று விட்டு தனது மோட்டார் பைக்கில் வீடு திரும்பியுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவரது மோட்டார் பைக் மீது மோதியது. 

இதனால் தூக்கி வீசப்பட்ட சாம் டேனியல் நடுரோட்டில் விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு வாகனம் அவர் மீது ஏறி இறங்கியுள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே சாம் டேனியல் பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து சிவந்தி பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று சாம் டேனியல் உடலை பிரேத பரிசோதனை செய்து பெற்றோர்கள் கையில் ஒப்படைக்க போலீசார் தயாராக இருந்தனர். ஆனால் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். மேலும் தப்பி ஓடிய இரண்டு வாகனங்களையும் பிடித்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என கூறிவிட்டனர்.

இது குறித்து சாம்டேனியலின் தந்தை செல்வராஜ் கூறும் போது, எனது மகனை திட்டமிட்டே ஒரு கும்பல் கொலை செய்தது போல தெரிகிறது. இதனால் அந்த வாகனங்களில் வந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். எனவே அவர்களை கண்டு பிடிக்கும் வரை நாங்கள் உடலை வாங்க மாட்டோம் என்று கூறினார்.

இதற்கிடையில் சிவந்திபட்டி போலீசார் தீவிர விசாரணை செய்து தப்பி ஓடிய வாகனத்தினை பிடித்து விட்டோம். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வோம் என்று கூறினர். இன்று காலை மீண்டும் போலீசார் உறவினர்களிடம் சமரம் செய்து வருகிறார்கள். செல்வராஜ் தமிழரசி தம்பதிகளுக்கு சாம் டேனியல் ஒரே மகன் என்பதும், அவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு நடந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது