மனைவியைக் கொன்று கணவன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி!

 
மனைவி கொலை

செல்போன் சார்ஜர் ஒயரால் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொள்ள முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் வசித்து வரும் தம்பதி  ஜில்சன் -லிசா.  இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் .  இவர்களுடைய குடும்பத்தில் திடீரென மிகக் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் தன் மனைவியை கொலை செய்துவிட்டு ஜில்சன் தற்கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.  

தந்தையை கொலை செய்த மகன்!! திடுக்கிடும் பரபரப்பு வாக்குமூலம்!!

அதன்படி  இரவு குழந்தைகள்  தூங்கிவிட்ட பிறகு அவர்களின்  அறையை ஜில்சன் பூட்டிவிட்டார். பின்னர் தன்னுடைய மனைவியை சார்ஜர் ஒயரை கொண்டு கழுத்தை நெரித்து கொலை செய்தார்.  இதனையடுத்து வீட்டின் பின்புறம் உள்ள ஒரு மரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்த நிலையில் மரக்கிளை கீழே முறிந்து விழுந்துவிட்டது.  

இதன் காரணமாக அவர் தன் கையை கிழித்து விட்டு பின்னர் வீட்டிலிருந்த விஷத்தை குடித்தார். இதற்கிடையில் அவர் தன் மனைவியை கொலை செய்வதற்கு முன்பாக நண்பர் ஒருவருக்கு மெசேஜ் செய்திருந்த நிலையில் அந்த மெசேஜை பார்த்து அக்கம்பக்கத்தினருக்கு தகவல் அளித்தார். இந்த தகவலின் பேரில் அக்கம பக்கத்தினர்  கதவை உடைத்துக் கொண்டு சென்று பார்த்தபோது அங்கு லிசா பிணமாக கிடந்தார். ஜில்சன் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார்.

தற்கொலை இளம்பெண் தீ விபத்து கற்பழிப்பு பாலியல் கொலை க்ரைம்

அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு   வருகிறது. இச்சம்பவம் குறித்து  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?