ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்த இளைஞர் ... !
பீகார் பக்சரிலிருந்து வந்த கோலு யாதவ். ரயில் பயணித்தபோது பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணை பார்த்தார். சிலர் அவளை தவறாக நடத்தினர். பேசிக்கொண்டு மனக்கசப்பு உண்டாக்கினர். இதைக் கண்ட கோலு கவலைப்பட்டார். அவளுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்று நினைத்தார்.
அந்தப் பெண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். பெற்றோரிடம் எல்லாம் விளக்கினார். அவர்கள் மனசு வைத்தார்கள். நாட்கள் செல்லச்செல்ல அந்தப் பெண்ணுக்கான பாதுகாப்பு பாசமாக மாறியது. பெற்றோரின் ஒப்புதலுடன் கோலு யாதவ் நேரடியாக திருமணம் செய்து கொண்டார். இருவரின் திருமணப் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் சூடாக பரவி வருகிறது.
ரெடிட் தளத்தில் "சினிமா கதை போல" என்ற தலைப்பில் வைரலான இந்த நிகழ்வுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர். "அக்ஷய் குமார் இந்தக் கதையை உடனே படம் எடுத்துவிடுவார்" என்று ஒருவர் கமெண்ட். "அவரோ அவள் வாழ்க்கையைக் காப்பாற்றினார்; அவர்கள் இருவரின் வாழ்க்கையையும் இணைத்தார்" என்று மற்றொருவர் எழுதியுள்ளார். ஜாதி, மதம், பின்னணி எதையும் பார்க்காமல் மனிதநேயம் மட்டும் பார்த்து வாழ்க்கை முடிவு செய்த கோலு யாதவுக்கு பலரும் கைதட்டுகிறார்கள்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
