கலக்கல் வீடியோ... பால், கோலா, சோடா மூன்றும் வித்தியாசமான போமில் எனர்ஜி ட்ரிங்க்!

தினமும் சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் வீடியோ சினிமா ஆக்ஷன் காட்சியை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இதில் ஒருவர், பாட்டிலும் கண்ணாடி கிளாஸும் கையில் வைத்து கொண்டு சோடாவை ஊற்றி சுழற்றி ஒரு அற்புதமான காட்சியை கண்முன்னே கொண்டு வருகிறார்.
How does the glass not break… pic.twitter.com/koez4MXlTo
— non aesthetic things (@PicturesFoIder) March 23, 2025
அவருடைய சோடா தயாரிக்கும் ஸ்டைல் ஒரு ப்ரொஃபெஷனல் பார்டெண்டரை நினைவூட்டும் வகையில் உள்ளது. கண்ணாடி கிளாசில் பால், கோலா, சோடா மூன்றையும் சேர்த்து ஒன்றாக்கி இந்த ட்ரிங்கை தயாரிக்கிறார். அப்போது உருவான வித்தியாசமான ஃபோமை பார்த்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணியும் அசந்து போகிறார்.
“டாலி சாய்வாலாவின் உஸ்தாத் வந்தாச்சு!” எனக் கூறும் இந்த வீடியோவில், ஒரே நேரத்தில் பல கிளாஸ்களை கையாலேயே சுழற்றி கலக்குகிறார். ‘டயநமைட் டிரிங்க்’ என சிலர் இதனை பற்றி பயமுறுத்த , மற்றவர்கள் இதைப் பருகினால் சூப்பர்பவர்ஸ் கிடைக்கும் எனவும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
ஆனால் இந்த பால்+கோலா கலவையை மேற்கிழக்கு இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தில் பழங்காலம் முதலே புழங்கப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் “இந்த மாதிரி எங்களுக்குப் பக்கத்தில் சோடா விக்கிறவங்க இருந்தா, நாங்க டாப்பர்தான்!” என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!