கள்ளக்காதலியைக் கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி வாய்க்காலில் வீசிய கொடூரன்!
புதுச்சேரி வில்லியனூர் அருகே வி.மணவெளி செந்தாமரை நகரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (40). இவர் தன் கணவர் பரத்ராஜை நான்கு ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து செய்தார். அதன் பிறகு, அவர் 11-ம் வகுப்பு படிக்கும் மகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார். வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற மகளை அழைத்து வர தமிழ்ச்செல்வி கடந்த 5-ம் தேதி செல்லவில்லை. அவரது செல்போன் எண்ணும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால், பள்ளி நிர்வாகம் அவரது தம்பி மதன்ராஜுக்குத் தகவல் அனுப்பியது.

மதன்ராஜ் மகளை வீட்டிற்கு அழைத்து வந்தார். ஆனால், தமிழ்ச்செல்வி வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், மதன்ராஜ் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வியைத் தேடத் தொடங்கினர். அவரது செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தனர். ஒதியம்பட்டைச் சேர்ந்த பர்னிச்சர் கடைக்காரர் அய்யப்பன் (40) என்பவருடன் தமிழ்ச்செல்வி அடிக்கடி பேசியது தெரியவந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் அய்யப்பனைப் பிடித்து விசாரித்தனர்.

அப்போது தமிழ்ச்செல்வியை கொலை செய்த அதிர்ச்சி தகவலை அய்யப்பன் ஒப்புக்கொண்டார். அய்யப்பனுக்கும் தமிழ்ச்செல்விக்கும் கள்ளக்காதல் உறவு இருந்துள்ளது. குடும்ப செலவுக்காக தமிழ்ச்செல்வி அய்யப்பனுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் கடன் கொடுத்ததாகத் தெரிகிறது. பணத் தகராறு காரணமாக அய்யப்பன் கடையில் வைத்து தமிழ்ச்செல்வியின் கழுத்தை நெரித்துக் கொன்றார். உடலை சாக்கு மூட்டையில் கட்டி கோர்க்காடு பகுதியில் உள்ள வாய்க்காலில் வீசியுள்ளார். அய்யப்பனுக்கு ஏற்கெனவே மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர். அவர் கடந்த 2015-ம் ஆண்டு வேறொரு கள்ளக்காதலியையும் இதேபோல் கொலை செய்து மூட்டையில் வீசிய வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
