காப்பீட்டு தகராறு… தாய், மனைவி , மகன், மகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் குடும்பமே கருகி பலி!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி முஸ்லிம் ஓடை தெருவைச் சேர்ந்த முபாரக் அலி சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி செய்யது அலி பாத்திமா இரண்டாவது திருமணமாக அக்பர் அலியை திருமணம் செய்திருந்தார். இதற்கிடையே, மறைந்த முபாரக் அலியின் காப்பீட்டு பணத்தை கேட்டு ஏற்பட்ட தகராறில் அக்பர் அலி தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த செய்யது அலி பாத்திமா, அவரது மகள் பர்வீன், மகன் பாரூக் மற்றும் தாய் சிக்கந்தர் பீவி ஆகியோர் மீது அக்பர் அலி பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். அப்போது அக்பர் அலிக்கும் தீப்பற்றியதாக கூறப்படுகிறது.

படுகாயமடைந்த ஐந்து பேரையும் போலீஸார் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிக்கந்தர் பீவி, செய்யது அலி பாத்திமா, அக்பர் அலி மற்றும் சிறுவன் பாரூக் உயிரிழந்தனர். தீக்காயமடைந்த சிறுமி பர்வீனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
