உறக்கார இளம்பெண்ணைப் பலாத்காரம் செய்து வீடியோவை பதிவேற்றிய வாலிபர்!
பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் சைபர் குற்றங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பாலியா மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயது இளம்பெண், வேலை நிமித்தமாகத் தனது குடும்பத்தைப் பிரிந்து வேறொரு ஊரில் தனியாகத் தங்கியிருந்துள்ளார். இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட அவரது 40 வயது உறவினர், கடந்த பிப்ரவரி மாதம் அந்தப் பெண்ணைச் சந்திக்கச் சென்றுள்ளார்.

அங்கு அந்தப் பெண்ணைக் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்த அந்த நபர், "வெளியே சொன்னால் உன் குடும்பத்தினர் மீது பொய்ப் புகார் கொடுத்துச் சிறைக்கு அனுப்பிவிடுவேன்" என்று மிரட்டியுள்ளார். இந்த மிரட்டலைப் பயன்படுத்திப் பலமுறை அந்தப் பெண்ணைச் சீரழித்துள்ளார்.
உச்சகட்டமாகக் கொடூரச் செயலை வீடியோவாகப் பதிவு செய்த அந்த நபர், அதனை இணையதளத்திலும் பதிவேற்றியுள்ளார். இதனால் மனவேதனையடைந்த அந்தப் பெண், துணிச்சலுடன் காவல்துறையில் புகார் அளித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர், தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act) மற்றும் பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த அந்த 40 வயது நபரைத் தேடிப் பிடித்து அதிரடியாகக் கைது செய்தனர். தற்போது அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
