முன்விரோதத்தில் அரிவாளால் வெட்டியவருக்கு 5 ஆண்டு சிறை... நீதிமன்றம் தீர்ப்பு!

தூத்துக்குடி மாவட்டம், குலைகரிசல் வழவு அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மகன் வெற்றிவேல் இவரது ஊரில் நடந்த கொடை விழாவில் விளம்பர நோட்டீஸ் போடுவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குலையன்கரிசல் தெற்கு தெரு பூலோக பாண்டி மகன் ராஜேஷ் கண்ணன், மெயின் ரோடு பாலகிருஷ்ணன் மகன் ஜோதிவேல் ஆகியோர் முன்விரோதம் இருந்துள்ளது.
கடந்த 15.01 2015 தேதி இரவு 10.10 மணி அளவில் வெற்றிவேல் நின்று கொண்டிருந்த போது "எனது தம்பி மேலயா போலீஸ் கேஸ் கொடுக்கிறாய்? நீயும் சப் இன்ஸ்பெக்டர் தானே? என்று ராஜேஷ் கண்ணன் தான் முதுகின் பின்புறம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெற்றிவேலின் வயிற்றில் வெட்டி உள்ளார்.
இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பு அளித்தார். அதில் Ipc 342 குற்றத்திற்கு 1 வருடம் மெய் காவல், Ipc 307 r/34 ன் படியான குற்றத்திற்கு 5 வருடம் மெய்க்காவல், ரூ.2,000 அபராதம் கட்ட தவறினால் ஆறு மாதம் மைக்காவல், Ipc 506(ii) என் படியான குற்றத்திற்கு இரண்டு வருடம் மெய் காவல் கட்ட தவறினால் மூன்று மாதம் மெய்க்காவல் சிறைதண்டனையும் crpc 428 ன் அறிக்கையின் படி ஏற்கனவே சிறையில் இருந்த நாட்கள் கழித்து மீதம் 5 வருடம் சிறை தண்டனையும் ரூ.3,000 அபராதமும் வழங்கப்பட்டது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!