இஸ்ரேலுக்கு உளவு... ஈரானில் ஒருவருக்கு மரண தண்டணை நிறைவேற்றம் !

 
ஈரான் இஸ்ரேல்
 

இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்புக்கு தகவல் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட அலி அர்தெஸ்தானி என்ற நபருக்கு ஈரான் அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. பணம் பெற்றுக் கொண்டு ரகசிய தகவல்களை இஸ்ரேலுக்கு வழங்கியதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கிரிப்டோகரன்சி மூலம் அவருக்கு பணம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஈரான் காவல்துறையால் கைது செய்யப்பட்ட அலி அர்தெஸ்தானி, விசாரணையின் போது மொசாட் அமைப்புக்கு உளவுபார்த்ததை ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உளவு பணிக்கான சன்மானமாக ஒரு மில்லியன் டாலர் பணமும், பிரிட்டன் விசாவும் வழங்கப்பட இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் அலி அர்தெஸ்தானிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையில், ஈரானில் அரசியல் மற்றும் தேச விரோத வழக்குகளில் மரண தண்டனை விதிப்பதை மனித உரிமை அமைப்புகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த சம்பவம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!