ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி ரூ.10 லட்சம், 6 பவுன் நகை பறிப்பு... இளம்பெண் புகார்!
தூத்துக்குடியை சேர்ந்த 36 வயதான விதவை பெண் ஒருவர் நேற்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்துக்கு வந்தார். அங்கு அவர் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் தூத்துக்குடியை சேர்ந்த அஜித்குமார் என்பவர் நண்பராக பழகி வந்தார். அவர் கடந்த ஆண்டு பிறந்தநாள் விழா என்று கூறி அழைத்து சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ளார். அதனை வீடியோ பதிவு செய்து சமூகவலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டினார்.
அதன்பிறகு அவ்வப்போது பணம் கேட்டு மிரட்டினார். இதுவரை சுமார் ரூ.10 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 6 பவுன் நகையை பறித்துக் கொண்டார். தொடர்ந்து அடித்து மிரட்டி வருகிறார். கடந்த வாரம் எனது தந்தையை தாக்கினர். இதனால் காயமடைந்த தந்தை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
ஆனால் இதுவரை தென்பாகம் போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை. மேலும் அவர் தொடர்ந்து பணம் கேட்டு வருவதுடன், ஆபாச வீடியோவை சமூகவலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டி வருகிறார். ஆகையால் சம்பந்தப்பட்ட வாலிபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி உள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
