பள்ளியில் சக மாணவனைக் கத்தியால் குத்திக் கொன்று செல்ஃபி எடுத்த கொடூரம்!

 
ரஷ்யா

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் ஒடின்ட்சோவோ மாவட்டத்தில் உள்ள கோர்கி-2 கிராமத்தில் அமைந்துள்ள பள்ளியில் ஒரு கொடூரமான தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.

திமோதி (15) என்ற மாணவன். சரியாகப் படிக்கவில்லை என்று ஆசிரியரால் கண்டிக்கப்பட்ட ஆத்திரத்தில் அவன் இருந்துள்ளான். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு வந்த திமோதி, பையில் கத்தியை மறைத்து எடுத்து வந்துள்ளான். ஆசிரியை ஒருவரிடம் நாட்டின் பெயரை விசாரித்த பிறகு, அங்கிருந்த பள்ளிப் பாதுகாவலர் டிமிட்ரி பாவ்லவ் (32) என்பவர் சம்பவப் பகுதிக்கு வந்துள்ளார்.

பள்ளி மானவி தற்கொலை

பாதுகாவலரைப் பார்த்ததும், திமோதி பையில் இருந்த மிளகு ஸ்பிரேவை (Pepper Spray) எடுத்து டிமிட்ரியின் முகத்தில் அடித்துள்ளான். அதிர்ச்சியடைந்து கீழே விழுந்த அவரை, கத்தியால் தாக்கியதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. அத்துடன் நிற்காமல், அந்தக் கட்டிடத்தில் இருந்த வேறு சில மாணவர்களையும் அவன் கத்தியால் குத்தியுள்ளான்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 10 வயது மாணவன் ஒருவன் பரிதாபமாகப் பலியாகி உள்ளான். இதைவிடக் கொடூரம் என்னவென்றால், பலியான சிறுவனின் உடலின் முன்னால் திமோதி நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டான். இது குறித்த வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை தற்கொலை வெட்டி மரணம் விபத்து

திமோதி பள்ளிக்கு வரும்போது, முக கவசம் (மாஸ்க்) மற்றும் ஹெல்மெட் அணிந்து வந்துள்ளான். மேலும், அவன் அணிந்திருந்த டி-ஷர்ட்டில் "உயிர்கள் முக்கியமில்லை" என எழுதப்பட்டிருந்தது, அவனது கொடூர மனநிலையைப் பிரதிபலிப்பதாக உள்ளது. இந்தச் சம்பவத்தைப் பார்த்த மற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வகுப்பறைகளுக்குள் சென்று தஞ்சம் அடைந்தனர்.

ரஷ்யாவில் பள்ளிகளில் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நடப்பது அரிது என்றாலும், சமீப ஆண்டுகளாகப் பள்ளியில் தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செல்யாபின்ஸ்க் நகரில் ஒரு மாணவன் சுத்தியலால் தாக்கியதில் 4 பேர் காயமடைந்த சம்பவமும் நடந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!