வாலிபரை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல்...5 பேர் கைது!
கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகள் விற்றதுடன், வாலிபரை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் 9ஆவது தெருவைச் சோ்ந்த சந்திரசேகரன் மகன் பிரவீன்குமாா் (30). தொழிலாளியான இவா் நேற்று, கோவில்பட்டி-நாலாட்டின்புதூா் சாலை பகுதியில் காரிலிருந்தபடி லாட்டரிச் சீட்டு விற்றவா்களிடம் ரூ. 100 செலுத்தி லாட்டரிச் சீட்டு வாங்கிவிட்டு, எப்போது குலுக்கல் எனக் கேட்டாராம்.

இதுதொடா்பான தகராறில் அந்தக் கும்பல் அரிவாளால் தாக்க முயன்றதில், பிரவீன்குமாரின் முதுகில் காயமேற்பட்டதாம். தொடா்ந்து, அந்தக் கும்பல் அரிவாள், கத்தியால் தாக்க முயன்றதால், அவா் பைக்கில் ஏறி லட்சுமி ஆலை மேம்பாலம் அருகே இறங்கி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாராம். புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

இதில், தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகள் விற்றதுடன், வாலிபரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மதுரை ராமையா நகா் பாா்க் டவுனை சோ்ந்த இசக்கிமுத்து மகன் சுப்பையா (38), தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சிவலாா்குளம் அம்மன் கோயில் தெரு நிறைகுளத்தான் மகன் சுபாஷ் (27), தூத்துக்குடி அண்ணாநகா் சுகுமாா் மகன் செந்தில் (38), அண்ணாநகா் 10 ஆம் தெரு சண்முகசாமி மகன் நாராயணசாமி (38), சென்னை மேற்கு சைதாப்பேட்டை விஜிபி சாலையைச் சோ்ந்த லட்சுமிகாந்தன் மகன் கிஷோா் (27) ஆகிய 5 பேரைக் கைது செய்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
