அட... மாஸ் வீடியோ... டூர் செலவை குறைக்க தூள் ஐடியா... பைக்கில் இரு கைகளிலும் லக்கேஜுடன் ஜாலி ரைடு!

சுற்றுலா என்றாலே குஷியாகிவிடுவர். அனுதினமும் செய்யும் வேலைகளில் இருந்து ஒரு அவசர விடுதலை என்பது போல் கொண்டாடி களித்துவிடுவர். வழக்கமான வாழ்விடத்தை விட்டுவிட்டு ஓய்வு, மகிழ்ச்சி, பொழுதுபோக்கு என் வெவ்வேறு இடங்களுக்கு சென்று வருவது தான். பல உலக நாடுகளில் சுற்றுலா என்பது வருமானம் தரும் முக்கிய தொழில் துறையாக விளங்குகிறது. அந்த வகையில் தற்போது வெளியான வீடியோ ஒன்று மக்களிடையே சுற்றுலா செல்லும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
அதாவது தாய்லாந்தில் ஒரு நபர் செலவை குறைக்கும் வகையில் வித்தியாசமான முறையில் சவாரி செய்த சம்பவம் அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. இந்த நிகழ்வு தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றால் இது போல் செலவை குறைக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் செல்லுங்கள் எனக் கூறும் வகையில் இருக்கிறது. அதன்படி தாய்லாந்தில் சுற்றுலா பயணி ஒருவர் ஒரு இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டு தன்னுடைய 2 பயண பெட்டிகளையும் வாகனத்தின் இருபுறங்களிலும் வைத்துக் கொண்டு செல்கிறார்.
இவர் சுமைகளை சவாரி பயணத்திற்கு ஏற்றபடி வாகனத்தின் பின்னால் அமர்ந்து கொண்டு செல்கிறார். இதை பார்க்கும் போது பயண செலவை குறைக்கும் மிகச்சிறந்த யுக்தியாக திகழ்கிறது. இது குறித்த காட்சிகள் “traveltips”என்ற இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே 849900-க்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!