பகீர் வீடியோ... காதலியை சூட்கேசில் வைத்து ஆண்கள் விடுதிக்கு அழைத்து சென்ற மாணவன்!

 
 பகீர் வீடியோ...  காதலியை சூட்கேசில் வைத்து ஆண்கள் விடுதிக்கு அழைத்து சென்ற மாணவன்!  

ஹரியானா மாநிலத்தில்  சோனிபத்தில் உள்ள ஓபி ஜிண்டால் குளோபல்  பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவன் ஆண்கள் விடுதியில் தங்கியிருந்தான். இவன் தனது காதலியை  ஆண்கள் விடுதிக்குள் சூட்கேஸில் அடைத்து வைத்து கொண்டு செல்ல முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகின்றன.  



இந்த சம்பவத்திற்கு பதிலளித்த பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரி , ‘மாணவர்கள் “குறும்புத்தனமாக நடந்து கொண்டனர்” என்றும் அது பெரிய விஷயமல்ல. யார் அந்த பெண் என விசாரணை நடத்தியதில்  அந்த மாணவரின் காதலி எனத் தெரிய வந்துள்ளது .
இந்த காணொளியைப் பார்த்து பலர் அதிர்ச்சியுடனும், கேலியுடனும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வீடியோவில், காலேஜ் ஹாஸ்டலுக்கு ஒரு மாணவர், பெரிய சூட்கேசுடன் வருகிறார். திடீரென அவரை நிறுத்தி, சூட்கேசை சோதனை செய்கின்றனர் வார்டன்கள். சூட்கேசை திறந்தால், உள்ளே இருந்து ஒரு பெண், வெளியே வருகிறார். எல்லோருக்கும் ஷாக் தான். காதலியை யாருக்கும் தெரியாமல், பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் கூட்டிச் செல்ல, இப்படி ஒரு பிளான். ‘என்னடா இப்படி இறங்கிட்டீங்க’ என நெட்டிசன்கள் அந்த ஜோடியை கலாய்த்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web