பெண் காவலரை தாக்கியவருக்கு செருப்பு மாலை அணிவித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்!.

 
செருப்பு மாலை

சத்தீஸ்கர் மாநிலத்தில் சுரங்கத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது பெண் காவலரை தாக்கி, அவரது சீருடையை கிழித்த நபர் கைது செய்யப்பட்டார். முக்கிய குற்றவாளியான சித்ரசென் சாஹுவை பெண் காவலர்கள் செருப்பு மாலை அணிவித்து மக்கள் மத்தியில் ஊர்வலமாக அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இந்த காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ராய்கர் பகுதியில் கடந்த டிசம்பர் 27-ம் தேதி சுரங்கப் பணிகளுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. 300-க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பாதுகாப்புக்காக காவலர்கள் குவிக்கப்பட்டனர். அப்போது சிலர் பெண் காவலரை தாக்கி, அவதூறாக பேசி விரட்டியுள்ளனர். இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை தேடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் காவலருக்கு நடந்த அவமானகரமான தாக்குதல் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!