போதையில் மாணவியைக் கட்டிப்பிடித்து முத்தமிட்ட வாலிபர் - தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்!
புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஒருபுறம் உற்சாகமாக நடைபெற்று வந்த நிலையில், சென்னை வடபழனி பகுதியில் போதை ஆசாமியின் அநாகரீகச் செயல் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வடபழனி பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். கொண்டாட்டங்களுக்குப் பிறகு, அந்த மாணவி தனது வீட்டின் மாடிப் படிக்கட்டில் தனியாக அமர்ந்திருந்தார். அப்போது அங்கு அத்துமீறி நுழைந்த வாலிபர் ஒருவர், எதிர்பாராத விதமாக அந்த மாணவியைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிடவே, சத்தம் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அந்த வாலிபரைத் தப்பவிடாமல் மடக்கிப் பிடித்தனர்.

பிடிபட்ட வாலிபருக்குப் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். பின்னர், இது குறித்து வடபழனி போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த வாலிபரைக் கைது செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் கைதான வாலிபர் சூளைமேடு பகுதியைச் சேர்ந்த கவுதம் (23) என்பது தெரியவந்தது.

புத்தாண்டு பிறப்பைக் கொண்டாடுவதற்காகக் காலை முதலே அவர் மது அருந்திவிட்டு போதையில் இருந்துள்ளார். நள்ளிரவில் போதை தலைக்கேறிய நிலையில், மாணவி தனியாக இருப்பதைப் பார்த்து இந்த அநாகரீகச் செயலில் ஈடுபட்டுள்ளார். மாணவியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், கவுதம் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
