பல பெண்களை பலாத்காரம் செய்தவர் வெட்டிக்கொலை... 8 பெண்கள் கைது!

 
மாணவி பலாத்காரம்!! ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்!! தமிழக ராணுவ வீரரின் வெறிச்செயல்!!

ஒடிசாவில் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தவரை வெட்டிக் கொன்றதாக 8 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 60 வயது முதியவர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய மனைவி இறந்து விட்டதால், வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 4ம் தேதியில் இருந்து அவர் மாயமானதாக, போலீசில் அவருடைய உறவினர்கள் புகார் செய்தனர். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தேடி வந்தனர். 

அப்போது அந்த கிராமத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள வனப்பகுதியில் எலும்புக்கூடு கிடப்பதாக வந்த தகலைத் தொடர்ந்து போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு உடல் முழுவதும் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்த ஆணின் எலும்புக்கூட்டை, கைப்பற்றிய போலீசார் அதனை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் எலும்புக்கூடாக கிடந்தது காணாமல் போனதாக கூறப்பட்ட முதியவர் என்று தெரியவந்தது.

பலாத்காரம் காதல் கள்ளக்காதல்

இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தினர். அப்போது அந்த முதியவர் கொலை செய்யப்பட்டதும், அதற்கான பின்னணி பற்றியும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. போலீசாரின் விசாரணையில், அந்த முதியவர் தனது மனைவி இறந்த பின்னர், பல பெண்களை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து யாரும் புகார் கொடுக்காததால், அவர் தொடர்ந்து பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

கடந்த 3ம் தேதி அந்த கிராமத்தை சேர்ந்த 52 வயது விதவை பெண் ஒருவரை, அந்த முதியவர் வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட அந்த பெண், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது உறவினர்களிடம் கூறினார். இதைக் கேட்ட பெண்கள் சிலர் தாங்களும் அவரால் சீரழிக்கப்பட்டோம். 

பாலியல் பலாத்காரம்

இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று கூறினர். இதையடுத்து அந்த விதவைப் பெண் உள்பட 8 பெண்களும், அவர்களுக்கு உதவியாக 2 ஆண்களும் ஒன்று சேர்ந்து, 3-ந்தேதி இரவே அந்த முதியவர் வீட்டுக்கு சென்றனர்.அப்போது அவர் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 8 பெண்களும் தங்களிடம் இருந்த கத்தியால் அவரை வெட்டி படுகொலை செய்தனர்.

பின்னர் முதியவர் உடலை 10 பேரும் சேர்ந்து, அருகில் உள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்று தீ வைத்து எரித்தனர். இந்த தகவல்கள் அனைத்தும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து சம்பந்தப்பட்ட 10 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இது பற்றி கஜபதி மாவட்ட எஸ்பி ஜதீந்திர குமார் பாண்டா கூறுகையில், இந்த கொலையில் ஈடுபட்ட 8 பெண்களில் 6 பேர் அந்த முதியவரால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசில் எந்த புகாரும் அளிக்கவில்லை. புகார் கொடுத்து இருந்தால் போலீசார் நடவடிக்கை எடுத்து இருப்பார்கள். அதே நேரம் சட்டத்தை அவர்கள் கையில் எடுத்ததால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது