மணப்பாறை ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி பார்வையாளர் உயிரிழப்பு!

 
முரு

திருச்சி  மாவட்டம் மணப்பாறை அடுத்த பொத்தமேட்டுப்பட்டி புனித வியாகுல தேவாலயத் திடலில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி துவங்கி, கோலாகலமாக நடைப்பெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 700  காளைகளும், 350க்கும் காளையர்களும் களமிறக்கப்பட்டனர். இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியைக் காண நேரில் சென்றிருந்த ஆண்டவர் கோவில் பூசாரிபட்டியைச் சேர்ந்த முருகன் (வயது 54) என்பவரை காளை முட்டியதில், படுகாயமடைந்து திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி  காலமானார். 

ஜல்லிக்கட்டு

தேவாலயத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டு வாடிவாசல் வந்தடைந்த கோவில் காளைகள் முதலில் அவிழ்க்கப்பட்டதைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் காளைகள் ஒன்றின் பின் ஒன்றாக வாடிவாசலில் அவிழ்க்கப்பட்டு, அழைத்து வரப்பட்டன. 

இந்த ஜல்லிக்கட்டு போட்டியினை திருச்சி ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் செல்வராஜ், நகர்மன்ற தலைவர் கீதா மைக்கேல் ராஜ் போட்டியை துவக்கி வைத்தனர்.

ஜல்லிக்கட்டு

வாடிவாசல் வழியே திமிறி சீறிப் பாய்ந்த காளைகள் காளையர்களை கலங்கடித்த நிலையில் நின்று விளையாடியது. சில காளையர்கள் தொட்டு கூட பார்க்க முடியாதபடி சீறிபாய்ந்தது. இருப்பினும் சில காளைகளை வீரர்கள் திமில் பிடித்து தழுவினர். காளைகளை பிடித்த வீரர்களுக்கு தங்க காசு, வெள்ளிக்காசு, ரொக்கம், சைக்கிள், பீரோ, கட்டில், பாத்திரங்கள் என பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. வீரர்களின் கைகளில் பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டியைக் கண்டு ரசித்த பார்வையாளர், காளை முட்டியதில் காலமானது, போட்டியைக் காண நேரில் குவிந்திருந்த மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web