தேசிய நெடுஞ்சாலையில் சரிந்த மாங்காய் லாரி...பெண் துடிதுடித்து பலி!
கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி, மோரமடுகு பகுதியில் வசித்து வரும் கூலித் தொழிலாளர்கள் சூளகிரி அருகே சப்படி கிராமப் பகுதியில் மாங்காய்களை பறித்து அதை மினி லாரியில் ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரியில் உள்ள மாங்காய் மண்டிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கொல்லப்பள்ளி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மினி லாரி டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மாங்காய்கள் சாலையில் சிதறி கிடந்தன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.

இந்த விபத்தில் சென்ன சந்திரம் கிராமத்தை சேர்ந்த 45 வயது பத்மா பலியானார். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
