ஜி.கே. மணி நெஞ்சுவலியால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

பாமக கௌரவ தலைவர் ஜி.கே. மணி நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த வாரம் முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் சனிக்கிழமை மாலை பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டத்திற்கு தைலாபுரம் தோட்டத்திற்கு நீங்கள் வரவேண்டும் எனக் கூறியிருந்தார்.
அதை ஏற்றுக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை தைலாபுரம் தோட்டத்தில் இருந்தார். நேற்று செவ்வாய்க்கிழமை காலை கல்வி கோவிலில் கட்டிடப் பணிகள் மீண்டும் தொடங்க வேண்டும் எனக் கூறினர். நேற்று காலை 5.30 மணிக்கு கட்டிடப் பணிக்கு சென்று தொடங்கி வைத்து விட்டு சென்னை திரும்பினார். மீண்டும் உடல் நலன் பாதிக்கப்பட்டதால் நேற்று மருத்துவமனைக்கு சென்றிருந்தார்.
அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால் சிகிச்சை பெறவேண்டும் என மருத்துவர்கள் கூறினர். நேற்று இரவு முழுவதும் சிறிது நேரம் கூட தூங்காமல் உடல்நிலை சரியில்லாததால் இன்று 18.6.2025 மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். பாமக எம்.எல்.ஏ நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜி.கே.மணியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!