பகீர்!! கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவிக்கு விஷ ஊசிபோட்ட கணவன் !!

 
கீர்த்தனா

மதுரையை சேர்ந்தவர் ஸ்ரீதரன் ( 27). தனியார் மருத்துவமனையில் உணவக மேலாளராக இவர் பணிபுரிந்து வந்துள்ளார். ஸ்ரீதரன் மனைவி கீர்த்தனா ( 27) மூன்று வயது மகன் சாய் சர்வேஸ் ஆகியோருடன் வசித்து வந்தார்.

ஸ்ரீதரனுக்கும் அவருடன் வேலை செய்யும் ரம்யாவுக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டது. பின்னர் அவர்களுக்கு பழக்கம் கள்ள உறவாக மாறி இருக்கிறது. இதனால் இவர்கள் தனிமையில் சந்தித்து வந்தனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் கீர்த்தனாவுக்கு தெரிய வந்ததும் கணவரை ஸ்ரீதரனை கண்டித்து இருக்கிறார். இதனால் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

கீர்த்தனா

இந்நிலையில், அன்னுார் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று கீர்த்தனா பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அதில், சில மாதங்களுக்கு முன் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது உடலில் விஷத்தன்மை கலந்துள்ளதாக கூறினர். சிகிச்சைக்கு பிறகு குணமாகி வீடு திரும்பினேன்.

என் கணவர் அவருடன் மருத்துவமனையில் பணிபுரியும் மற்றொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கேட்டதற்கு என்னை அடித்து துன்புறுத்தினார். எனக்கு சில மாதங்களுக்கு முன் விஷ ஊசி போட்டதையும் தெரிவித்தார். எனவே, என் கணவர் மீதும், உடந்தையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

கீர்த்தனா

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஸ்ரீதரன், காதலி மற்றும் ஒருவருடன் சேர்ந்து மனைவி கீர்த்தனாவை விஷ ஊசி போட்டு கொல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து ஸ்ரீதரனை போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதலி உள்பட மற்ற 2 பேரும் கோவையில் தலைமறைவாக இருந்தபோது போலீசார் கைது செய்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web