தொடரும் போராட்டம்... பரபரக்கும் அரசியல்... மணிப்பூர் முதல்வர் ராஜினாமா?!

 
பைரோன்சிங்

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பாஜக தலைமையிலான அரசு முதல்வர் தபிரேன் சிங் ஆட்சி செய்து வருகிறார். மணிப்பூரில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மெய்தி இனத்தினர், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என குரல் எழுப்பி வருகின்றனர்.  

ஏற்கனவே அங்கு பழங்குடி இனத்தவராக உள்ள நாகா, குகி இன மக்கள் இதனை தீவிரமாக எதிர்த்து வருகின்றனர். இதனால் அவர்களிடையே  மே மாதம் 3ம் தேதி முதல் மோதல் நிலவி வருகிறது.  இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பைரோன்சிங்

இருந்த போதிலும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் காவல்துறை திணறி வருகிறது. இதனையடுத்து மணிப்பூர் மாநிலம் முழுவதும் பரவிய கலவரங்களில் சுமார் 120 பேர் பலியாகி உள்ளனர். 3000 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 50,000க்கும் மேற்பட்ட மக்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  இதனால் அங்கு தொடர்ந்து அமைதியற்ற சூழல் நிலவி வருகிறது.  

மணிப்பூரின் தற்போதைய நிலைமைக்கு முதல்வர் பிரேன் சிங்தான் காரணம் எனக் கூறி வருகின்றனர். மேலும் இந்த நெருக்கடிக்கு அவர் தான் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

பைரோன்சிங்

 இதற்கிடையே மணிப்பூரில் இயல்புநிலையை மீட்டெடுக்க பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.   மத்திய உள்துறை அமைச்சர்   அமித்ஷா சார்பில் அனைத்து கட்சி கூட்டமும்  நடத்தப்பட்டது. இந்நிலையில், மணிப்பூர் மாநில முதல்வர்  பிரேன் சிங் இன்று ராஜினாமா செய்ய இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளன. தொடர்ந்து நடைபெறும் வன்முறை சம்பவங்கள், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து வருவதை அடுத்து மணிப்பூர் கவர்னர் அனுசியாவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை பிரேன் சிங் வழங்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி, உள்துறை அமைச்சர்  இருவரையும் மணிப்பூர் கவர்னர் சந்தித்த நிலையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம்  என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web