மணிப்பூரில் மீண்டும் வன்முறை... 30க்கும் மேற்பட்ட வீடுகள் எரிப்பு, துப்பாக்கிச் சூடு பதற்றம்!
ஜனாதிபதி ஆட்சி நீக்கப்பட்டு, மணிப்பூர் மாநிலத்தில் பைரோன் சிங் தலைமையில் புதிய பாஜ அரசு பதவியேற்ற சில நாட்களிலேயே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. உக்ருல் மாவட்டத்தின் லிட்டன் சரேய்கோங் கிராமத்தில் ஆயுதம் ஏந்திய கும்பல் திடீரென நுழைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிராமத்துக்குள் புகுந்த கும்பல் அங்கிருந்த ஒருவரை தாக்கியதுடன், பல வீடுகளுக்கும் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்கள் உயிர் பிழைக்க வீடுகளை விட்டு வெளியேறியதால், கிராமம் முழுவதும் அச்சநிலை நிலவுகிறது.
மேலும் ஆயுதம் ஏந்திய நபர்கள் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தொடர்ச்சியான தாக்குதலால் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புதிய அரசு பதவியேற்ற பிறகும் அமைதி நிலவுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், நிலைமை கட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
