மணிப்பூரில் பயங்கரம்: வீட்டின் மீது குண்டுகள் வீச்சு; 2 குழந்தைகள் உட்பட 4 பேர் துடிதுடிக்கப் படுகொலை!
மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுப்பூர் மாவட்டத்தில் உள்ள மொய்ராங் திராங்லாவ்பி கிராமத்தில் நேற்று நள்ளிரவு அரங்கேறிய கொடூரச் சம்பவம் அந்தப் பகுதியையே உலுக்கியுள்ளது. மலைச் சரிவுகளில் இருந்து மர்ம நபர்கள் வீசிய சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் குடியிருப்புப் பகுதிக்குள் விழுந்து வெடித்ததில், ஒரு வீடு முற்றிலும் தரைமட்டமானது. இந்த கோர விபத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு பச்சிளம் குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் சிதறி ரத்த வெள்ளத்தில் பலியாகினர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் மீண்டும் வன்முறை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் ராணுவத்தினர் மற்றும் கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். குண்டுகள் வீசப்பட்ட மலைப் பகுதிகளைச் சுற்றி வளைத்துள்ள அதிகாரிகள், நவீன ரகக் கருவிகள் மூலம் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அக்கம் பக்கத்து கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ள நிலையில், தற்காப்பு நடவடிக்கையாகப் பல இடங்களில் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மற்றொரு துயரச் சம்பவமாக, அகாம்பத் நிவாரண முகாமில் தங்கியிருந்த 7 வயது சிறுமி மாயமான நிலையில், இன்று அவரது உடல் சந்தேகத்திற்கிடமான முறையில் மீட்கப்பட்டுள்ளது. அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த 3 சிறுமிகளின் மரணங்கள் மணிப்பூரில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளதோடு, பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
