காதலியை கரம் பிடித்தார் 'மஞ்சுமல் பாய்ஸ்' பாடகர் வேடன்.. குவியும் வாழ்த்துகள்!

 
வேடன்

'மஞ்சுமல் பாய்ஸ்' உள்ளிட்ட திரைப்படப் பாடல்களின் மூலம் தென்னிந்திய இசை ரசிகர்களைக் கவர்ந்த பிரபல ராப் பாடகர் வேடன், வாழ்வில் இணைந்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த புகழ்பெற்ற சுயாதீன இசைக்கலைஞரான வேடன், தனது நீண்டகாலக் காதலியான எழுத்தாளர் நவமி லதாவை கரம் பிடித்துள்ளார்.

ஆரவாரங்கள் ஏதுமின்றி, கேரள மாநிலம் திருச்சூரில் மிகவும் எளிமையான முறையில் இவர்களது பதிவுத் திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். மணமகள் நவமி லதா ஒரு எழுத்தாளர் ஆவார். இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்த நிலையில், தற்போது சட்டப்பூர்வமாகத் தங்களது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.

வேடன்

தொடக்கத்தில் சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் வாயிலாகத் தனது தனித்துவமான ராப் பாடல்களைப் பதிவேற்றி இளைஞர்களிடையே பிரபலமானார். சமீபத்தில் பிளாக்பஸ்டர் ஹிட்டான 'மஞ்சுமல் பாய்ஸ்' திரைப்படத்தில் இவரது பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. இவரது கணீரென்ற குரலும், எதார்த்தமான வரிகளும் இவருக்குத் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கித் தந்தது.

சமூக வலைதளங்களில் இவர்களது திருமணப் புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், திரைத்துறையினரும் ரசிகர்களும் இந்த மணமக்களுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழில் பைசன் திரைப்படத்தில் இடம்பெற்ற “காளமாடன்” பாடலைப் பாடி கவனம் பெற்றிருந்தார். தனித்துவமான குரலும், சமூக உணர்வுள்ள வரிகளும் இவரை மேலும் பிரபலமாக்கியது.இந்த நிலையில், எழுத்தாளரான நவமி லதாவை கடந்த பிப்.24ம் தேதி பதிவுத் திருமணம் செய்து கொண்டார். புதிய தம்பதிக்கு ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!