15 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மங்காத்தா’ ரீ ரிலீஸ்… தியேட்டர்கள் திருவிழா கோலம்!

 
மங்காத்தா மங்காத்தா

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த ‘மங்காத்தா’ படம் 2011ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்தில் அஜித்துடன் அர்ஜுன் முதல் முறையாக இணைந்து நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இந்த படத்தில் திரிஷா, பிரேம்ஜி, ராய் லட்சுமி, அஞ்சலி, வைபவ், ஆண்ட்ரியா, மகத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

மங்காத்தா

நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அஜித் நடித்த இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. திரை வாழ்க்கையில் சிறிய பின்னடைவை சந்தித்த அஜித்துக்கு, ‘மங்காத்தா’ ஒரு மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்தது. கதாநாயகனை விட வில்லன் வேடமே ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.

இந்த நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ‘மங்காத்தா’ படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தியேட்டர்களில் பட்டாசு வெடித்தும், மேள தாளங்களுடன் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!