“யார் கண் பட்டதோ..?” மனோஜ் பாரதியின் மனைவியும் பிரபல நடிகை தான்... கதறியழும் நண்பர்கள்!

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் என்கிற எந்த பந்தாவும் இல்லாமல் எல்லோரிடமும் எளிமையாக பழகக் கூடியவர் மனோஜ். அதைவிட பழக ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அத்தனை அந்யோன்யம் காட்டுபவர்கள். பாரதிராஜாவை விட அவரது மகன் மனோஜின் நட்பு வட்டம் மிகப் பெரியது.
கடந்த 1999ல் தாஜ்மஹால் படத்தின் மூலம் தான் தமிழ்திரையுலகில் ஹீரோவாக அறிவிமுகமான மனோஜ், அதன் பின்னர் கடல்பூக்கள், வருஷமெல்லாம் வசந்தம் என அடுத்தடுத்து நடித்தும் நடிப்பில் உச்சம் தொட முடியவில்லை. சிம்பு நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன், மாநாடு ஆகிய படங்களிலும் முக்கிய வேடத்தில் மனோஜ் நடித்திருந்தார்.
சாதுரியன் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, உடன் நடித்த நடிகை நந்தனாவுக்கும் அவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. ஏற்கெனவே நண்பர்களான இருவரும் தங்கள் மனதைப் பரிகொடுத்த நிலையில், இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக் கொடி காட்டியதைத் தொடர்ந்து அடுத்து நந்தனாவின் சொந்த ஊரான கோழிக்கோட்டில் இவர்களது திருமணம் 2006ம் ஆண்டு நடந்தது.
கேரளத்துப் பெண்ணான நடிகை நந்தனாவின் முறைப்படி கோழிக்கோட்டில் அவர்களது வழக்கத்தின் படி திருமணம் நடந்தது. அதன் பின்னர் சென்னையில் இருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்வை பிரம்மாண்டமாக நடத்தி வைத்தார் பாரதிராஜா.
நந்தனா- மனோஜ் தம்பதிக்கு ஆர்த்திகா, மதிவதனி என்று இரு பெண் குழந்தைகள். திருமணத்திற்கு பிறகு நந்தனா நடிக்கவில்லை. கணவரின் தயாரிப்பு நிறுவனத்தில் அவருக்கு உதவியாக இருந்து வந்துள்ளார்.
மூத்த மகள் ஆர்த்திகா இயக்குநராக வேண்டும் என ஆர்வம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. இளைய மகள் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் மனோஜுக்கு ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளாமல் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில், நேற்று மாலை 6 மணிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார். உடனடியாக அவரை சிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில் அங்கு அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கை விரித்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!