மனோஜ் பாரதிராஜா உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

தமிழ் திரையுலகின் இயக்குனர் இமயம் பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா நேற்று மாரடைப்பால் திடீரென காலமானார். அவரது உடல் சென்னை நீலாங்கரையில் இருக்கும் பாரதிராஜாவின் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இரவு முதலே திரைத்துறையைச் சேர்ந்த ஏராளமானோர் மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் முதல்வராக ஸ்டாலின் நேரில் சென்று மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பின்னர் பாரதிராஜாவுக்கு ஆறுதல் கூறினார். இதனையடுத்து துணை முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரும் மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை 4:30 மணிக்கு மனோஜின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!