நாளை முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் - மன்சூர் அலிகான் பேட்டி!
வேலைக்காகத் தமிழ்நாட்டிற்கு வரும் வெளி மாநிலத்தவர்களுக்கு, இங்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என்ற விநோதக் கோரிக்கையை வலியுறுத்தி, நடிகர் மன்சூர் அலிகான் அவர்கள் நாளை (டிசம்பர் 3) முதல் 'சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை' தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
நடிகரும், சமூக ஆர்வலருமான மன்சூர் அலிகான், தான் முன்னெடுக்க இருக்கும் உண்ணாவிரதப் போராட்டம் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசும்போது, தனது நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கினார்.

"வேலை செய்வதற்காக வட மாநிலம், தென் மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு ஏராளமானோர் வருகிறார்கள். ஆனால், அவர்களுக்குத் தமிழகத்தில் வாக்குரிமையை வழங்கக் கூடாது" என்று அவர் வலியுறுத்தியுள்ளார். வேலைக்காக மட்டுமே வந்து குடியேறியவர்களுக்கு இங்கு வாக்குரிமை அளிப்பது, காலப்போக்கில் தமிழகத்தின் உரிமைகளைப் படுகுழியில் தள்ளும் என்று அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் உரிமைகளைப் பாதிக்கும் இந்த நடைமுறையைக் கண்டிக்கும் விதமாகவே தனது போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும், தமிழகத்தின் உரிமைகளைப் படுகுழியில் தள்ளும் தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும், இந்தப் போராட்டம் சென்னையில் நாளை (டிசம்பர் 3) காலை 8 மணி முதல் 'சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்' என்ற பெயரில் நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்திற்கு வேலைக்காக வரும் குடிமக்களுக்கு, அங்குள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற உரிமை உண்டு என்ற சட்ட நடைமுறை உள்ள நிலையில், மன்சூர் அலிகானின் இந்தக் கோரிக்கை விவாதப் பொருளாகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
