"நம்முடன் பல முன்னாள் அமைச்சர்கள் வரப்போகிறார்கள்" - செங்கோட்டையன் பரபரப்புப் பேச்சு!

 
செங்கோட்டையன்

தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த பிறகு, முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல் தலைவருமான கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் தனது சொந்த ஊரான கோபிசெட்டிபாளையத்தில் ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது, விரைவில் பல முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணையப் போவதாகவும், தற்போதைய அரசியல் சூழலில் அதிமுகவின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் பரபரப்புப் பேசினார்.

தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், தனது அரசியல் பயணத்தை நினைவு கூர்ந்தார். "நான் பார்த்த முதல் தலைவர் எம்.ஜி.ஆர். அடுத்து, இரண்டாவது தலைவராக ஜெயலலிதாவைப் பார்த்தேன். அதேபோல, தமிழகத்தை நாளை ஆளப்போகும் தலைவராக நான் விஜயைப் பார்க்கிறேன்," என்று அவர் விஜயைப் புகழ்ந்தார்.

செங்கோட்டையன்

"எம்.ஜி.ஆர். அவர்கள் ஜெயலலிதாவிற்கு வழிகாட்டியாக இருந்ததுபோல, நானும் தமிழ்நாட்டை ஆளப்போகும் இளம் தலைவர் விஜய்க்கு வழிகாட்டியாக இருப்பேன். விஜய் முதலமைச்சராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது," என்று அவர் உறுதியாகத் தெரிவித்தார்.

தமிழகத்தில் தற்போது அரசியல் மாற்றத்திற்கான காலங்கள் கனிந்து வருவதாகக் குறிப்பிட்ட செங்கோட்டையன், மிக விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி பலப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

"வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் நம்முடைய கூட்டணி மிக வலிமையாக மாறும். நாம் எதிர்பார்ப்பதுபோல, நம்மோடு இன்னும் பல முக்கிய முன்னாள் அமைச்சர்கள் வந்து இணைவார்கள். அவர்கள் அனைவரும் விஜயின் புனிதமான ஆட்சியை அமைக்கத் துணை நிற்பார்கள்" என்று அவர் கூறினார். இவரின் இந்தப் பேச்சு, தமிழக அரசியல் களத்தில் அடுத்த சில வாரங்களில் முக்கிய மாற்றங்கள் நிகழக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கோட்டையன்

முன்னாள் முதல்வரும், அதிமுகவின் தற்போதைய பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாக விமர்சித்த செங்கோட்டையன், "எடப்பாடி பழனிசாமி இதுவரை ஒரே ஒரு தேர்தலிலாவது வெற்றி பெற்றிருக்கிறாரா?" என்று கேள்வி எழுப்பினார். மேலும், அதிமுக இப்போது எங்கே இருக்கிறது என்ற நிலைக்கு ஆளாகிவிட்டதாகவும் அவர் கூறினார்.

தவெகவில் நிலவும் ஜனநாயகத்தைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், "யார் யாரின் புகைப்படத்தை வேண்டுமானாலும் சட்டையில் வைத்திருக்கலாம். எங்கள் தலைவர் விஜய் அனைவரையும் அரவணைத்துச் செல்பவர்" என்று பெருமிதம் தெரிவித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!