ஜூலை 6ம் தேதி சென்னை தீவுத்திடலில் மாரத்தான்!

தமிழகத்தில் கூட்டுறவுகளின் சீரிய செயல்பாடுகள் காரணமாக ஏழை, எளிய மக்கள் சமூக பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டுள்ளனர். கூட்டுறவின் மகிமையைக் கொண்டாடும் வகையிலும், சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025 மற்றும் சர்வதேச கூட்டுறவு நாளைக் கொண்டாடும் வகையிலும், கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களால் கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில் மாரத்தான் தொடங்க உள்ளது.
அந்த வகையில் ஜூலை 6, 2025ம் தேதி காலை 5.30 மணிக்கு சென்னை தீவுத்திடலில் தொடங்கி மாரத்தான் நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு ஒரு பிரிவாகவும், 40 வயதுக்கு மேற்பட்டோர்க்கு இன்னொரு பிரிவாகவும், ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக நடைபெறவுள்ளது.
இம்மாரத்தானில் கலந்து கொள்ளும் ஆண், பெண் உட்பட அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பதக்கம், சான்றிதழ், டி-ஷர்ட் மற்றும் சிற்றுண்டி இலவசமாக வழங்கப்படும். முதல் பரிசாக ரூ.30,000/-ம், இரண்டாம் பரிசாக ரூ.20,000/-ம், மூன்றாம் பரிசாக ரூ.10,000/-ம் வழங்கப்படும். மாரத்தானில் கலந்து கொள்ளும் அனைத்து பங்கேற்பாளர்களும் https://www.tncu.tn.gov.in/marathon/register என்ற இணையதளம் மூலம் நுழைவுக் கட்டணமாக ரூ.100/- செலுத்தி பதிவு செய்து மாரத்தானில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!