மார்ச் 12ம் தேதி உள்ளூர் விடுமுறை... கலெக்டர் திடீர் அறிவிப்பு!

தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தில் 12 சிவன் கோவில்கள் மற்றும் 5 பெருமாள் கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழா நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இத்துடன் ஒவ்வொரு ஆண்டும் மாசிமக விழாவும் நடக்கும்.
இதனையொட்டி கும்பகோணத்தில் உள்ள மகாமக குளக்கரையில் மாசிமக தீர்த்தவாரி சிறப்பாக நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான மாசி மக விழா கோவில்களில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசி மக தீர்த்தவாரி மார்ச் 12ம் தேதி புதன்கிழமை மகாமக குளத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில், மாசி மக தீர்த்தவாரியை முன்னிட்டு மார்ச் 12ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடுகட்ட மார்ச் 29ம் தேதி சனிக்கிழமை அன்று அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!