இந்திய மகளிர் ஹாக்கி அணி பயிற்சியாளராக மீண்டும் மரிஜ்னே நியமனம்!
இந்திய மகளிர் ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்ஜோர்ட் மரிஜ்னே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஹாக்கி இந்தியா இன்று அறிவித்துள்ளது. இதன் மூலம் அவர் மீண்டும் அணியின் பொறுப்பை ஏற்க உள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மரிஜ்னேவின் முதல் தொடராக மார்ச் 8 முதல் 14 வரை ஐதராபாத்தில் நடைபெறும் பெண்கள் ஆக்கி உலகக் கோப்பை தகுதி சுற்று இருக்கும். இந்த தொடர் அணிக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பயிற்சியாளர் நியமனம் குறித்து மரிஜ்னே பேசுகையில், 4.5 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய ஆற்றலுடன் திரும்புகிறேன் என்றார். அணியின் வளர்ச்சிக்கு முழு ஆதரவு அளிப்பேன் என்றும் கூறினார். வீராங்கனைகள் உலக அரங்கில் தங்கள் முழுத் திறனை வெளிப்படுத்த உதவுவதே தனது இலக்கு என தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
