அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா வியாபாரம்… இளம்பெண் உட்பட 3 பேர் கைது

 
கஞ்சா

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் திருப்பணித்துரா அருகே சாத்தாடி சாலையோர அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஹில் பேலஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரிஜின் தாமஸ் தலைமையில் போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினர்.

திருச்சியில் காரில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது!

சோதனையில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த இளம்பெண் உள்பட 3 பேர் பிடிபட்டனர். அவர்கள் தலச்சேரியை சேர்ந்த நிவேத் ஷைனித் (22), தேவா சதீஷ் (22), ஆலப்புழா மாவட்டம் அம்பலப்புழாவை சேர்ந்த தேவிகா (23) என தெரியவந்தது. வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா விற்று வந்ததும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

போலீஸ்

இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!