மெரினாவில் 300 கடைகள்… பயனாளிகள் குலுக்கலில் தேர்வு !

 
மெரினா

சென்னையின் மெரினா கடற்கரை பகுதியில் அமைக்கப்பட உள்ள 300 கடைகளுக்கான வியாபாரிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின் படி, ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நீதித்துறை முன்னாள் அதிகாரிகள் மேற்பார்வை செய்தனர். நீதிமன்றம் முன் அடையாளம் கண்ட 1,417 வியாபாரிகளில் இருந்து ஒவ்வொரு பிரிவிலும் தலா 100 பேர் என 300 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

உணவு, அலங்காரம், பொம்மைகள் என மூன்று பிரிவுகளில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் தலா 5 கடைகள் என 15 கடைகள் மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. முழு குலுக்கல் நிகழ்வு 4 எல்.இ.டி திரைகளில் ஒளிபரப்பப்பட்டு வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், மெரினா கடற்கரை வியாபாரிகள் இந்த குலுக்கலை புறக்கணித்தனர். 1996 கடைகள் உள்ள நிலையில் 300 பேருக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதாகவும், அனைத்து வியாபாரிகளுக்கும் உரிய ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!