மாற்று மத திருமணம்... பெற்றோரை கொன்று ஆற்றில் வீசிய மகன்!

 
உபி
 

உத்தரப் பிரதேசம் ஜான்பூர் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் ஷியாம் பகதூர் மற்றும் அவரது மனைவி பபிதா கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாற்று மத பெண்ணை திருமணம் செய்த மகன் அம்பேஷை பெற்றோர் ஏற்காததால் நீண்ட காலமாக குடும்பத்தில் விரிசல் இருந்து வந்தது. கடந்த 8-ம் தேதி பெற்றோரிடம் பணம் கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதம் கொடூர முடிவுக்கு வழிவகுத்தது.

ஆம்புலன்ஸ்

ஆத்திரத்தில் அம்மிக்கல்லால் தாயையும், தடுக்க வந்த தந்தையையும் தாக்கிய அம்பேஷ் இருவரையும் கொன்றதாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். பின்னர் உடல்களை ரம்பத்தால் துண்டுகளாக அறுத்து சாக்குப்பையில் அடைத்து ஆற்றில் வீசியுள்ளார். சந்தேகம் வராமல் இருக்க தாய், தந்தை காணாமல் போய்விட்டதாக சகோதரியிடம் நாடகமாடி தலைமறைவானார்.

போலீஸ்

ஒரு வாரம் கழித்து ஊருக்கு திரும்பிய அம்பேஷை போலீசார் விசாரித்ததில் உண்மை வெளிவந்தது. அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆற்றில் வீசப்பட்ட சாக்கு மூட்டைகள் மீட்கப்பட்டன. சில உடல் பாகங்கள் காணாமல் போன நிலையில் தேடுதல் தொடர்கிறது. இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!