லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் சார்லஸ் புதிய கட்சி துவக்கம் - புதுச்சேரியில் 'லட்சிய ஜனநாயக கட்சி' ஆரம்பம்!

 
மார்ட்டின் சார்லஸ்

புதுச்சேரியைச் சேர்ந்த சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின், அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் வகையில், "லட்சிய ஜனநாயக கட்சி" என்ற பெயரில் தனிக்கட்சியைத் தொடங்கியுள்ளார். இந்தக் கட்சியின் பெயர் அறிவிப்பு, ஜெனீவாவில் உள்ள ஐ.நா.மன்றத்தின் மனித உரிமைகள் சபையின் உலகளாவிய மேடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தக் கட்சியின் பெயர் ஆரம்பத்தில் 'புதுச்சேரி வெற்றிக் கழகம்' என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.

மார்ட்டின் சார்லஸ்

ஆனால் நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க. (தமிழக வெற்றிக் கழகம்) உடன் கூட்டணி அமைய வாய்ப்பு இல்லை என்பதால், தற்போது 'லட்சிய ஜனநாயக கட்சி' என்று பெயர் மாற்றப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக ஊழலை ஒழிக்க விரும்பும் விஜய்யின் த.வெ.க.வுடன் கூட்டணி குறித்துப் பேசுவதற்குத் தயாராக இருப்பதாகவும், பழைய ஊழல் கட்சிகளுடன் கூட்டணி வைக்க விருப்பம் இல்லை என்றும் ஜோஸ் சார்லஸ் மார்டின் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கட்சியின் கொடி மற்றும் கொள்கைகள் ஆகியவை விரைவில் நடைபெறவுள்ள கட்சியின் தொடக்க விழாவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!