எதிர்க்கட்சி எம்பிக்கள் மீது நடவடிக்கை ஜனநாயக படுகொலை... மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு!

 
மார்க்சிஸ்ட்
 

தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெகுஜன வசூல், தேர்தல் நிதி மற்றும் அரசியல் விளக்க சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில செயலாளர் பெ.சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் அதை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை இந்திய வரலாற்றிலேயே மோசமானதாக இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார். எந்த மக்களுக்கும் பயன் இல்லாத இந்த நிதிநிலை அறிக்கை குறித்து நடிகர் விஜய் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ரத்து செய்து புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும், இதை பாஜக மற்றும் அதிமுக ஆதரித்து கிராமப்புற மக்களை ஏமாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியுடன் தொகுதி பங்கீடு குறித்து பின்னர் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் கூறினார். இரட்டை இலக்க தொகுதிகளை கேட்டு பெற முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். திமுக தலைமையிலான கூட்டணியே வலிமையான கூட்டணி என்றும், 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!