எதிர்க்கட்சி எம்பிக்கள் மீது நடவடிக்கை ஜனநாயக படுகொலை... மார்க்சிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு!

 
பேரவை
 

தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெகுஜன வசூல், தேர்தல் நிதியளிப்பு மற்றும் அரசியல் விளக்க சிறப்பு பேரவைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் பெ.சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில செயலாளர், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் கூறினார். மேலும் இந்திய வரலாற்றிலேயே மோசமான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், எந்த மக்களுக்கும் பயன் தராத அறிக்கை என்றும் விமர்சித்தார். இந்த நிதிநிலை அறிக்கை குறித்து நடிகர் விஜய் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ரத்து செய்து புதிய சட்டம் கொண்டு வந்துள்ளதாகவும், இதை அதிமுக வரவேற்றுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார். வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் இரட்டை இலக்க தொகுதிகளை பெற முயற்சி செய்வோம் என்றும், திமுக தலைமையிலான கூட்டணி வலிமையானது என்றும் தெரிவித்தார். இதில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!