எனது கருத்துக்கள் துரோகத்தின் வெளிப்பாடே... மன்னிப்பு கேட்ட மேரிகோம்... வைரல் வீடியோ !

 
மேரிகோம் மேரிகோம்
 

முன்னாள் கணவர் ஆன்லர் கோம் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், உலக சாம்பியன் மேரி கோம் விளக்கம் அளித்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், தன் பேச்சு நீண்ட கால மனவேதனையின் வெளிப்பாடு என தெரிவித்துள்ளார். கடின உழைப்பால் சம்பாதித்த கோடிக்கணக்கான பணம் ஏமாற்றப்பட்டதாக அவர் கூறினார். தாம் வாங்கிய நிலத்தையும் இழந்ததாகவும், அது தற்போது சில குழுக்களால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சமீபத்தில் வைரலான வீடியோவில், திருமணத்திற்கு பின் தனது சம்பாத்தியத்தை முன்னாள் கணவர் பயன்படுத்தியதாக மேரி கோம் கூறியிருந்தார். இதனால் சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் எழுந்தது. இதுகுறித்து அவர் விளக்கமளிக்கையில், பல ஆண்டுகள் திருமண வாழ்க்கை நன்றாக இருந்ததாக தெரிவித்தார். நம்பிக்கை உடைந்த பிறகே சூழ்நிலை மாறியதாக கூறினார். ஏப்ரல் 2025-ல் விவாகரத்து பெற்றபின்பும் அமைதியாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

தனது பேச்சு கால்பந்து வீரர்களுக்கு எதிரானது அல்ல என மேரி கோம் மறுத்துள்ளார். குத்துச்சண்டை வீரரானாலும் கால்பந்தை இதயப்பூர்வமாக நேசிப்பதாக கூறினார். கடின உழைப்பால் மட்டுமே சுனில் சேத்ரி போன்ற உயரத்தை எட்ட முடியும் என்றே சொன்னதாக விளக்கினார். எந்த விளையாட்டையோ, வீரர்களையோ இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை எனத் தெரிவித்தார். தனது கருத்துகள் தவறாக புரிந்திருந்தால் மனதார மன்னிப்பு கேட்பதாக உருக்கமாக கூறினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!