மாசி அமாவாசை... மயானக் கொள்ளை... குழந்தை வரம் வேண்டி ‘ரத்த சோறு’ சாப்பிட்ட பெண்கள்!

 
மயானக் கொள்ளை

இன்று மாசி மாத அமாவாசை தினத்தில் மயானக்கொள்ளை திருவிழா தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே வீரகனுாரில் அமைந்துள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடைபெற்ற மயானக் கொள்ளை விழாவில் பால் குடம் ஊர்வலத்துடன் கோலாகலமாக விழா தொடங்கப்பட்டது.  

காடு வளைப்பு, காளி புறப்பாடு, வள்ளாளராஜன் கோட்டை இடித்து, மயான சூறை இடுதல் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடத்தப்பட்டது. இதில்  அலங்கரிக்கப்பட்ட அம்மன், வீரபத்திர சுவாமி, பாவடைராயன் சுவாமிகள் புஷ்ப தேர் அலங்காரத்தில், சுவேத நதிக்கு கொண்டு செல்லப்பட்டது.  

மயானக் கொள்ளை

சுவேத நதி மண்ணில் பெரியாண்டிச்சி அம்மன் சுவாமி உருவம் வடிவமைத்து, 10க்கும் மேற்பட்ட ‘கிடா’, 20க்கும் மேற்பட்ட கோழிகள் பலி கொடுக்கப்பட்டன.  பக்தர்கள் தானியங்கள் கலந்து பொங்கல் வைத்து எடுத்து வந்னர். இந்த பொங்கலில் பலி கொடுத்த ஆடுகளின் ரத்தங்கள் பீய்ச்சி அடிக்கப்பட்டன.  காளி உருவம் அணிந்து வந்த பூசாரி  பூங்கரகம் எடுத்து ஆடி வந்தார்.  மயான கொள்ளை விழாவில்  ரத்தம் கலந்த சாப்பாட்டை குழந்தை வரம் கேட்டு மடிப்பிச்சை எடுத்த 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. அத்துடன் தீராத நோய்கள், பல்வேறு பிரச்னைகள் இருப்பவர்களும் இந்த ரத்த சாப்பாட்டை வாங்கி சாப்பிட்டனர்.  

மயானக் கொள்ளை

ரத்தம் கலந்த சாப்பாடு வீசியடிக்கப்பட்டது. இந்த சாப்பாட்டை பெற  பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனர்.

வேடமிட்டு வந்த 50க்கும் மேற்பட்ட பர்வதராஜ குல மீனவர்கள், நேர்த்திக் கடனாக   100க்கும் மேற்பட்ட ஆடு, 200க்கும் மேற்பட்ட கோழிகளைக் கடித்து ரத்தத்தை ‘ருசி’ பார்த்தபடி ஊர்வலமாக வந்து கொண்டிருந்தனர். கோலாகலமாக நடைபெற்ற இந்த விழாவில் ஆத்துார், கெங்கவல்லி, தலைவாசல், வீரகனுார் சுற்றுவட்டார பகுதிகளில் வசித்து வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web