திருச்செந்தூரில் மாசித் திருவிழா ... மார்ச் 2ம் தேதி தேரோட்டம்!
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் மார்ச் 2ம் தேதி நடைபெறுகிறது.

விழாவின் 8-ஆம் திருநாள் அதிகாலை, சுவாமி சண்முகர் வெள்ளிச் சப்பரத்தில் 'வெள்ளை சாத்தி' கோலத்தில் வீதி உலா வருவார். அதனைத் தொடர்ந்து, அன்று பகல் 10:30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் 'பச்சை சாத்தி' கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10ம் திருநாள் தேரோட்டம், மார்ச் 2ம் தேதி திங்கட்கிழமை நடைபெறுகிறது. அன்று காலை 7 மணிக்கு விநாயகர், மி மற்றும் அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி வெளிவீதி நான்கு ரத வீதிகளிலும் பவனி வந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பார்கள். 11-ஆம் திருநாளான மார்ச் 3-ஆம் தேதி இரவு 10:30 மணிக்கு மேல் சுவாமியும் அம்பாளும் 11 முறை தெப்பத்தில் சுற்றி வரும் தெப்ப உற்சவம் நடைபெறும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
