மாசி மகம் - தீர்த்தவாரி சிறப்புகளும் வழிபாடுகளும்!
கோயில்களின் நகரம் என்று அழைக்கப்படும் கும்பகோணத்தில் வரும் மார்ச் 3ம் தேதி செவ்வாய்க்கிழமை மாசி மகம் விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் 'மகாமகம்' உலகப் புகழ் பெற்றது என்றாலும், ஆண்டுதோறும் வரும் 'மாசி மகம்' அன்று கும்பகோணத்தில் உள்ள மகாமகக் குளத்தில் நீராடுவது பாவங்களை நீக்கும் என்பது ஐதீகம்.
மாசி மகத்தன்று கும்பகோணத்தில் உள்ள 12 சிவன் கோயில்கள் மற்றும் 5 விஷ்ணு கோயில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் ஊர்வலமாக மகாமகக் குளத்திற்கு எழுந்தருளுவார்கள். சுவாமிக்குக் குளத்தில் "தீர்த்தவாரி" நடைபெறும் போது அங்கே நீராடுவது கோடி புண்ணியம். ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் நடைபெறும் விசேஷ அபிஷேகங்களில் கலந்துகொள்வது சிறப்பாகும். மாசி மகத்தன்று நீர்நிலைகளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது, அவர்களின் ஆசியை முழுமையாகப் பெற்றுத் தரும்.

அறிவியல் ரீதியாக, மாசி மாதத்தில் சந்திரன் 'மகம்' நட்சத்திரத்திலும், சூரியன் 'கும்ப' ராசியிலும் இருக்கும்போது பூமியில் ஒருவிதமான ஆற்றல் மிகுந்த காந்த அலைகள் நிலவுகின்றன. இந்த நேரத்தில் புண்ணிய நதிகளில் நீராடுவது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி ஆரோக்கியத்தைத் தரும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.விஷ்ணுபதி புண்ணியகாலம்: அஷ்டலட்சுமி அருளை அள்ளித்தரும் அற்புதத் தருணம். புண்ணிய காலங்களில் மிகவும் அரிதானதாகக் கருதப்படும் 'விஷ்ணுபதி புண்ணியகாலம்' வழிபாட்டின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு வழிபட இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
வருடத்தில் நான்கு முறை மட்டுமே இந்த விஷ்ணுபதி புண்ணியகாலம் வரும். வைகுண்ட ஏகாதசியை விடவும் பல மடங்கு அதிக பலன்களைத் தரக்கூடிய ஒரு காலமாக இது போற்றப்படுகிறது. சித்திரை, ஆடி, ஐப்பசி மற்றும் தை மாதப் பிறப்புகளைப் போல, வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி மாதப் பிறப்புகளின் போது வரும் இந்த விஷ்ணுபதி காலம் மகாவிஷ்ணுவிற்கு மிகவும் உகந்தது.

விஷ்ணுபதி புண்ணியகாலம் என்பது ஒரு குறிப்பிட்ட சில மணி நேரங்கள் மட்டுமே நீடிக்கக்கூடியது. இந்த நேரத்தில் செய்யப்படும் தியானமும், ஜபமும் மற்ற காலங்களில் செய்வதை விட பல ஆயிரம் மடங்கு கூடுதல் பலனைத் தரும். குறிப்பாக நாளை விடியற்காலையில் இருந்து காலை 10 மணி வரை வழிபாட்டிற்கு உகந்த நேரமாகக் கருதப்படுகிறது.
மகாவிஷ்ணுவிற்குப் பிடித்தமான துளசி இலைகளால் சகஸ்ரநாமம் சொல்லி அர்ச்சனை செய்வது குடும்பத்தில் உள்ள தரித்திரங்களை நீக்கும். விஷ்ணுவின் திருமார்பில் குடிகொண்டிருக்கும் மகாலட்சுமியை இந்நாளில் வழிபாட்டின் போது "கனகதாரா ஸ்தோத்திரம்" பாடி வழிபட்டால் செல்வம் நிலைத்து நிற்கும். தாமரைத் தண்டு திரி போட்டு நெய் தீபம் ஏற்றுவது உங்கள் குலதெய்வத்தின் அருளைப் பெற்றுத் தரும்.
"மகாவிஷ்ணுவின் பாத கமலங்களைச் சரணடைகிறேன்" என்ற பொருள் தரும் கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்வது சிறப்பு:
"ஸ்ரீ விஷ்ணுபாத கமலாய நமஹ"
ஜாதகத்தில் குரு தசை நடப்பவர்கள், ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் மற்றும் திருமணத் தடை உள்ளவர்கள் இந்த விஷ்ணுபதி புண்ணியகாலத்தில் மகாவிஷ்ணுவை வழிபட்டால் உடனடித் தீர்வு கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
