4 தொழில் நிறுவனங்களில் பூட்டை உடைத்து முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்… !

 
திருப்பூர்

திருப்பூர் அணைப்பாளையம் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த முகமூடி கொள்ளையர்கள், அடுத்தடுத்து 4 தொழில் நிறுவனங்களில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலேஜ் ரோடு சோதனைச்சாவடி அருகே உள்ள பனியன் நிறுவனங்களே இலக்காக மாறின.

நேற்று காலை தொழிலாளர்கள் வேலைக்கு வந்தபோது, நிறுவனங்களின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தன. உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக் கிடந்ததுடன், பீரோக்களும் உடைக்கப்பட்டிருந்தன. உடனே உரிமையாளர்கள் மற்றும் 15 வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், 5 முகமூடி கொள்ளையர்கள் இரும்பு ராடு, கத்தி போன்ற ஆயுதங்களுடன் நுழைந்து கொள்ளையடித்ததை கண்டறிந்தனர். 4 நிறுவனங்களில் சேர்த்து ரூ.5 ஆயிரம் கொள்ளை போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முகமூடி கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!