தமிழகத்தில் பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம்! முதல் மாவட்டமாய் அறிவித்தார் ராணிப்பேட்டை கலெக்டர்!
தமிழகத்தில் முதல் மாவட்டமாய், பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மக்களாக சில நடைமுறைகளையும், பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றினால், கொரோனா தொற்று பரவலைத் தவிர்க்கலாம். ஆனால், மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது என்று எதிலும், சட்டத்திற்கும், கட்டாயத்திற்காகவும் மட்டுமே பொதுமக்கள் பின்பற்றுகிறார்கள். உறவினர்கள், விருந்து, விசேஷங்கள், திருவிழாக்கள் போன்றவற்றில் முக கவசம் அணியாமலேயே கலந்து கொள்கின்றனர். இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி அறிவித்துள்ளார்.

கொரோனா பரவலைத் தவிர்க்க தமிழ்நாடு சுகாதாரத்துறை கொரோனா பரிசோதனை உட்பட பல்வேறு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஆனாலும், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் 500 என்ற எண்ணிக்கையை தாண்டியுள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரங்களில் இருந்த நிலையில், கடந்த இரண்டு மூன்று தினங்களாக தினந்தோறும் 10 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்திலும் சென்னை உட்பட பல மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.
கடந்த 10 நாட்களுக்கு முன் தினசரி பாதிப்பு 300-க்கும் கீழ் இருந்த நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 500-ஐ தாண்டியுள்ளது. தமிழ்நாட்டில் நேற்றைய தினம் 502 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை ராணிப்பேட்டை மாவட்டத்தில் 85 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி அறிவித்துள்ளார். மேலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி அறிவுறுத்தி உள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
