மகளிர் தினத்தில் மாஸ் அறிவிப்பு ... பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2500/-!

 
ரூபாய் பணம்

சர்வதேச மகளிர் தினத்தில்   டெல்லி பெண்களுக்கு முதல்வர் ரேகா குப்தா மாதம்தோறும் ரூ.2500 நிதி உதவி வழங்கும் ‘மகிளா சம்ரிதி’ திட்டம் விரைவில் தொடங்கப்படும் எனக் கூறியுள்ளார்.  இது குறித்து சனிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.  


மகிளா சம்ரிதி யோஜனாவை செயல்படுத்துவதற்காக தனது தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு இருப்பதாக முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.  இந்தக் குழுவில் மூத்த அமைச்சர்கள் ஆஷிஷ் சூட், பர்வேஷ் வர்மா மற்றும் கபில் மிஸ்ரா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இதற்கான பதிவு செயல்முறை விரைவில் தொடங்கும் எனவும்,  ஒரு வலை போர்ட்டலும் தொடங்கப்படும் எனவும்  டெல்லி முதல்வர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.   

டெல்லி சட்டமன்றத் தேர்தலில், ஏழைப் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2,500 வழங்குவதாக பாஜக வாக்குறுதி அளித்தது. 26 ஆண்டுகளுக்குப் பிறகு, பாஜக தலைநகரில் தனது  அதிகாரத்தைக் கைப்பற்றியது.  இந்நிகழ்வில் டெல்லி பெண்களுக்கு பாஜக தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜே.பி. நட்டா வாழ்த்து தெரிவித்தார். பெண்கள் அதிகாரமளிப்பு திட்டம் விரைவில் தொடங்கப்படும். இத்திட்டத்தின் மூலம், டெல்லியில் பெண்கள் அதிகாரம் அளிப்பதை நோக்கி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனக் கூறியுள்ளார்.  டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றியில் பெண்கள் பங்கு வகித்ததாக அவர் கூறினார். தேசிய தலைநகரில் பெண்களின் ஆதரவு இல்லாமல் வெற்றி சாத்தியமில்லை” என  நட்டா கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web